நாட்டை சூழ்ந்துள்ள 'பொருளாதார நெருக்கடி' எனும் இருள் அகன்று, இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன்மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு



" தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள 'பொருளாதார நெருக்கடி' எனும் இருள் அகன்று, இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன்மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் என உறுதியாக நம்புகின்றேன்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

" இன்றைய நவீன உலகில் சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசப்படுகின்றது. ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கூட நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்கள்தான் தமிழர்கள். இயற்கை வழிபட்டு, கொண்டாட்டங்களை நடத்தி சுற்றுசுழலை பாதுகாத்தனர். இம்முறையும் இயற்கைக்கு நன்றி கூறி, இனிமையாக தைத்திருநாளை கொண்டாடுவோம். விவசாயிகளையும் போற்றுவோம்.

இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திருநாள் வழங்க வேண்டும். அதற்காக இன்றைய மகத்தான நாளில் இறைவழிபாடுகளில் ஈடுபடுவோம். இஷ்ட தெய்வங்களை வணங்குவோம்.

மலையக தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் தேசிய பொங்கல் விழாவையும் இம்முறை மலையகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் .
மலையகத்தில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும், இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்." - என்றுள்ளது.

ஊடக செயலாளர்
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :