உகண்டாவில் பொதுநலவாய மாநாட்டில் சபாநாயகருடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பங்கேற்புஅஷ்ரப் ஏ சமத்-
கண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்றுவரும் பொதுநலவாய(Commonwealth) நாடுகளின் சபாநாயகர்களுக்கும், பாராளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்குவோருக்குமான மாநாட்டில் (CSPOC)கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக்குழுவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கம்பாலாவின் முனியொன்யோ தளத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் வியாழக்கிழமை(3) இந்த மாநாடு ஆரம்பமாகியது.அதற்குச் சமாந்தரமாக செயலமர்வுகளும் இடம்பெறுகின்றன.

இதில் பங்குபற்றும் இலங்கைத் தூதுக் குழுவினர் எண்டபே சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தபோது அவர்களுக்கு அங்கு வரவேற்பளிக்கப்பட்டது.

பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வைக்கும் 73 நாடுகளில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் பங்குபற்றுவதாக முன்னரே அறிவித்திருந்தனர்.
பொதுநலவாய நாடுகளுக்கு மத்தியில் நிலவிவரும் ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதும் ,பாராளுமன்றச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறன் உள்ளவையாக ஆக்குவது பற்றி ஆராய்வதும் இந்த மாநாட்டின் பிரதானமான நோக்கங்களாகும்.

பொது நலவாய நாடுகளின் பிரஸ்தாப மாநாட்டில் (CSPOC)பங்குபற்றும் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ,1994ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் குழுக்களின் பிரதித் தலைவராக பதவி வகித்து, பாராளுமன்ற அமர்வுகளுக்குத் தலைமை தாங்கியிருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :