மேலடுக்கு சுழற்சி, இலங்கை கடற்பரப்பு வலையத்தை விட்டு நகர்கிறது. – கிழக்கில் கொட்டித்தீர்க்கும் மழையின் தாக்கம் சீரடைய வாய்ப்பு?



லங்கைக்கு தென்மேற்காக நகர்ந்திருக்கும் மேலடுக்கு சுழற்சியானது இன்று நள்ளிரவுக்குள் இலங்கை கடற்பரப்பு வலையத்தை விட்டு அகன்று மாலைதீவுகளுக்கு செல்லவுள்ளது. இதன் பயனாக கடந்த இரண்டு நாட்களாக கிழக்கு மாகாணம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் கனமழையின் தாக்கம் இன்று நள்ளிரவுடன் சீரடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கனவே வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மேலும் பதற்றப்படாமல் நாளைமுதல் அடுத்த கட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மேலும் தற்போது வடக்கில் காணப்படும் மேகமூட்டம் மற்றும் துமி தூறலுடன் கூடிய வானிலை முற்றுமுழுதாக நீங்கி, நாளை வியாழன் முதல் இரவில் பனிக்குளிரும் பகலில் வெயிலுடனும் கூடிய வறண்ட வானிலையும் நிலவுமென எதிர்பார்க்கபடுகிறது.

செந்தில் குமரன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :