வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் உலர் உணவுப் பொதிகள்!



ண்மையில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால்; மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் ஒரு பகுதி வெள்ள நீரில் மூழ்கியிருந்தது.

குறித்த பிரதேசத்தில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்தனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் பல்வேறு உதவி வழங்கும் நிறுவனங்களினாலும் தனி நபர்களாலும் சமைத்த உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் குறித்த பிரதேசத்தில் வசித்த குடும்பன்குக்கு இன்று 2024.01.18 ஆம் திகதி சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் வைத்து மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கம் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம். நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் மற்றும் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா ஆகியோரும் விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஷான், கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம்.அஜ்ஹர் ஏ.ஏ. நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர் என்.எம். ஸிராஜ்டீனின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் ஏ.எல். பௌசர் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் வசித்து, 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சுனாமி கடல்பேராலையால் பாதிக்கப்பட்டு மீள் குடியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




















 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :