நாடெங்கிலும் உள்ள 10 இலட்சம் மாணவர்களுக்கான பசுமைப் புரட்சி விழிப்புணர்வு வேலைத்திட்டமானது, சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் மினிமினி எனும் புனைப்பெயர் கொண்ட மின்ஹா எனும் மாணவியினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
அந்த வகையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும் இன்றைய தினம் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டமான நடைபெற்றது. குறித்த விழிப்புணவு செயற்பாட்டின் போது பூகோளமயமாதல், பொலித்தீன் பாவணை, பிளாஸ்டிக் பாவணை மற்றும் உலக வெப்பநிலை ஆகியவற்றால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்ச்சித்தின் ஒரு பகுதியாக நாடெங்கிலும் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment