வெள்ளத்தில் தத்தளிக்கும் திராய்க்கேணி கிராமம்.! கொட்டும் மழையில் உணவு வழங்கிய ஜெயசிறில்



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள திராய்க்கேணி தமிழ் கிராமம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

பார்க்குமிடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி தருகிறது.
அங்குள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். மக்கள் கோரியதன் பேரில்
நேற்று (10)இரவு ஏழாவது நாளாக அங்கு சென்ற காரைதீவு முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக சேவையாளருமான கி.ஜெயசிறில் அங்கிருந்த மக்களுக்கு கொட்டும் மழைக்கு மத்தியில் சமைத்த உணவை வழங்கினார்.

அவருடன் சமூக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சென்றிருந்தார்.
மக்கள் வீதிகளில் நின்று அந்த உணவை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அங்கு ஜெயசிறில் கூறுகையில்.

கனமழை மற்றும் சேனநாயக்கா சமுத்திரத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுடைய அவல நிலையில் பங்கு கொள்வதற்கு முன் வாருங்கள். நான் தயார். நீங்களும் தயாராகுங்கள் எந்தப் பிரதேசத்தில் சமைத்த உணவு வேண்டுமோ தொடர்பு கொள்ளுங்கள் உதவி செய்பவர்கள். சரீர உதவியாக இருந்தால் நேரடியாக பங்கு கொள்ளுங்கள். இடர் உதவி வழங்குகின்ற சமூக சேவையாளர்கள் நலம்பிரும்பிகள் நேரடியாக உங்களுடைய உதவிகளை வழங்குவதற்கு எங்களுடன் கை கோருங்கள் என்றும் எமது மக்களுக்காக ஆலயங்களில் அன்னதானம் செய்வதை விட அமுதுகள் செய்வதை விட பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை நேரடியாக அல்லது எங்களோடு இணைந்து பணி செய்ய முன் வாருங்கள் என்றும் உங்களுடன் இந்த தொலைபேசி 0753100862 இலக்கத்தோடு தொடர்பு கொண்டு உங்களது தேவைகளையும் சேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :