விடுமுறையின் பின் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு பாடசாலை அதிபர் ஏ. எல் .எம் பாயிஸ் தலைமையில், பிரதி அதிபர் ஐ.எம். பாஹிம், பொது சுகாதார பரிசோதகர் எம். மிஹியார் , பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் சிரமதான அடிப்படையில் பாடசாலை வகுப்பறைகள், சுற்றாடல் என்பன சுத்தம் செய்யப்பட்டது.
இப் பாடசாலையானது சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த வெள்ள அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு பாடசாலையினுடைய வகுப்பறை கட்டிடங்கள் அனைத்திலும் வெள்ள நீர் புகுந்து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும், வெள்ளத்தில் மூழ்கிய வகுப்பறை கட்டடங்களின் நீர் இன்னும் வற்றாத நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment