கல்முனை பிரதேசத்தில் ஆறுகளை அண்டிய பகுதிகளில் குப்பை கொட்டுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
தூர இடங்களில் உள்ளவர்கள் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் கொண்டுவரும் வீட்டு திண்மக் கழிவுகள் இரவு வேளைகளில் ஆற்றோரங்களில் இனந்தெரியாதோரால் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டப்படும் குப்பைகளை நாய்,மாடு, பூனை ,ஆடு மற்றும் கட்டாக்காலி மாடுகளும் காகங்களும் ஏனைய இடங்களுக்கு பரவச் செய்வதுடன் பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஸத் காரியப்பர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment