இன்று புலம்பெயர் உறவுகளால் அக்கரைப்பற்றில் வெள்ளத்துள் பாதிக்கப்பட்டோருக்கு 700 பகல்போசன பொதிகள்!



காரைதீவு நிருபர் சகா-
க்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இன்று(11) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் 700 பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகல் போசனம் பொதியாக வழங்கப்பட்டது.

ஆலையடிவேம்பு நாவற்காடு கோளாவில் பனங்காடு போன்ற பிரதேசங்களில் வெள்ளத்துள் தத்தளிக்கின்ற மக்களுக்கு நேரடியாக இந்த பகல் போசனம் வழங்கப்பட்டது .
காரைதீவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் லோகநாதன் கஜரூபன் தலைமையிலான இளைஞர் குழுவினர் இந்த பகல் போசனத்தை அவர்கள் காலடிக்கு சென்று வெள்ளத்துக்குள் நின்று வழங்கினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :