ஏறாவூரில் மாபெரும் இரத்ததான நிகழ்வுஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தலைவர் செய்யட் அஹமட் தலைமையில் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது

இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் அவர்களும் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகர சபையின் விசேட ஆணையாளர் ஹமீம், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் முகைதீன், ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா சபையினுடைய தலைவர் அஷ்செய்க் சாஜித் குசைன், சமூக சேவை உத்தியோகத்தர் நஜிமுதீன், கிராம சேபை உத்தியோகத்தர் சீராஸ், சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகர்களான முபாறக், றிபாய்தீன், ஹனீபா, ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்

உரையாற்றிய பிரதம அதிதி நிஹாறா மௌஜூத் அவர்கள் ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியமானது எமது பிரதேசத்தில் சிறப்பாக இயங்குகின்ற சமூகமட்ட அமைப்பாகும் இவர்கள் எமது பகுதியில் வாழ்கின்ற ஏழை மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துகின்ற விடயம், வைத்திய உதவி, என பல்வேறு வகையான உதவிகளை எங்களது ஆலோசணைகளை பெற்று சிறப்பாக செய்துவருகின்றார்கள்.

அவர்கள் பயனாளிகளை தெரிவு செய்கின்ற விதம் சிறப்பானது இந்த இரத்ததான நிகழ்வை இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்திருக்கின்றனர். மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. என்றும் கூறினார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :