கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வலது குறைந்தோருக்கான உபகரணங்களில் ஒரு தொகை பொத்துவில் பிரதேச செயலகத்தில் உரிய பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
பொத்துவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.இராமகுட்டி தலைமையிலான இந்த நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.முஸராப் கலந்து கொண்டு உபகரணங்களை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக கணக்காளர் அப்துல் றஹூமான், நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.சுபையிர், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஜீ.அர்ஸாத், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.பதிஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாரை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் வை.எல்.நியாஸ், பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment