சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்வு





அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாரை மாவட்ட செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய சுனாமி ஒத்திகை பயிற்சி நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன் போது சுனாமி ஒன்று ஏற்படும் என்ற உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தால் மாணவர்களும் பாடசாலை ஆளணியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது.
அவற்றில் சுனாமி தொடர்பான அறிவுத்தல் கிடைக்கும் போது அவசர ஒன்றுகூடல் இடத்தில் ஒன்றுகூடவும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாணவர்களை கொண்டு சேர்ப்பதும் என்றவாறான செயற்பாடு இடம்பெற்றது.
இதில் மாணவர்கள் பாடசாலையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் முவப்பிக்கா மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் றியாஸ் அவர்களினதும் மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உத்தியோகத்தர் அல்தாப் மற்றும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவத்திற்கான உத்தியோகத்தர்கள் ஆகியோர் மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கியிருந்தார்.

UNDP இன் நிதி அனுசரணையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன், பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்துவத்திற்க்கு பொறுப்பான ஆசிரியர்களான யூ.கே. முபாறக் மற்றும் ஏ.எம்.எம். ஸாஹிர் ஆகியோர் பாடசாலை சார்பான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :