கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: பேராசியர்களுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதி மன்றம் தடை உத்தரவு!கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஸஹ்றி தாடி வைத்துக் கொண்டு தனது இறுதியாண்டுக் கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டமைக்கு காரணமான பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு எதிராக நேற்று இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட மாணவர் சார்பாக சட்டத்தரணி சுரேன் ஜானராஜ் மற்றும் சட்டத்தரணிகள் றுடானி ஸாஹிர், றஷாட் அஹமட், மேர்வின் தயாளன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தாடி விவகாரத்தில் இன்னொரு மாணவர் வழக்குத் தொடர்ந்து இடைக்கால உத்தரவொன்று அமுலில் இருக்கும் வேளை மீண்டும் பிரதிவாதிகள் தாடி வைத்திருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடுக்கின்றனர் என்ற விடயம் நீதியரசரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவரான ஸஹ்றியை பிரதிவாதிகள் தாடி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக வைத்தியசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்தும் விரிவுரைகளில் பங்கு பெறுவதைத் தடுத்தும் வந்திருந்தனர். எத்தனை முயற்சிகள் எடுத்தும் அவர்கள் பிடிவாதம் அவர்களை விடவில்லை. எந்தவித அடிப்படையும் இல்லாமல் அப்பட்டமான மனித உரிமை மீறலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இப்பேராசிரியர்கள் மீறி உள்ளனர். முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமான தாடி வைப்பதைத் தடுப்பதில் முன் நிற்கின்றனர். வழக்கினை செவியுற்ற நீதிமன்றம் மனுவில் கோரிய இடைக்கால நிவாரணத்தினை உடனே வழங்கியது.

குறிப்பிட்ட நிவாரணத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான மணிகண்டு திருக்குமார், பேராசிரியர் கருணாகரன் மற்றும் கிழக்குப் பல்கலைகழக நிர்வாகம் குறிப்பிட்ட மாணவரை வைத்தியசாலையில் நடைபெறும் Clinical Clarkshipல் பங்கு பற்றுவதில் இருந்தும், களவிஜயங்கள் செல்வதில் இருந்தும் ஏனைய பரீட்சைகளில் இருந்து தோற்றுவதில் இருந்து தடுக்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிக்கு எதிராக தடைஉத்தரவினை வழங்கி உள்ளது.

மாணவர் சஹ்றி மீண்டும் பல்கலைக்கழகம் செல்கிறார்.

Voices Movement
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :