நூருல் ஹுதா உமர்-
இலங்கையின் தேர்தல் தொடர்பான விடயங்களை ஆராய்வதிலும், பக்க சார்பற்ற தேர்தல் செயல் முறைமைகளையும் கண்காணிக்கவும், மக்களது வாக்குரிமையையும் உறுதிப்படுத்தவும், மனிதநேயத்தோடு தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளும் பஃப்ரல் நிறுவனத்துடன் இணைந்து சமூக மாற்றத்திற்காகவும் சமாதான இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் பீஸ் நெட் செயற்பாட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, அம்பாறை மாவட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் பல்லின சமூக மக்கள் உள்ளடங்கலாக (சமூக வலைத்தளம் பாவிக்கும் இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இணைய ரீதியான சமூகப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும் விதமாக ,சமூக வலைத்தளம்சார் போலி குற்றச்சாட்டு விடையங்களை குறைக்க வழிவகை செய்யத்தக்க, சிறிய பிரச்சினைகள் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதற்கு முன் தடுக்க கூடிய வகையில் பொது மக்களுக்கு இடையே இணைய பாதிப்பு தொடர்பான விடயங்களை கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,சமூக வலைத்தளம் தொடர்பான தெளிவும் அறிவும் சாதாரண பொதுமக்கள் தொடக்கம் பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் அனைத்து பல்லின மக்களும் உள்ளடங்களாக விழிப்புணர்வு வழங்குவதே இச்செயற் திட்டமாகும்.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கான விழிப்புணர்வு வழிகாட்டல் பயிற்சிநெறி அண்மையில் ஜனநாயக இளைஞர்கள் கல்விக் கூடத்தினுடைய பீஸ் நெட் திட்டத்தின் தலைவர் எச்.எம்.அமாஸீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மேட்பார்வையாளராக பஃப்ரல் நிறுவனத்தினுடைய திட்ட முகாமையாளரும், வளவாளருமான திருமதி பிரசன்யா பாக்கியசெல்வம் அவர்களும் ஜனநாயக இளைஞர்கள் கல்விக்கூடத்தினுடைய வளவாளரான ஆறுமுகம் சொர்ணலிங்கம் அவர்களும் இளைஞர்களுக்கான தங்களது ஆளுமையை வெளிக்காட்ட தக்க வண்ணம் இந்நிகழ்விற்கு வளவாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி எப்.எச்.ஏ. சிப்லி அவர்களும் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி பட்டறை வெற்றிகரமாக அமைவதற்கு அம்பாறை மாவட்ட ஜனநாயக இளைஞர்கள் கல்விக்கூட உறுப்பினர்கள் காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாக காணப்பட்டது.
0 comments :
Post a Comment