பொத்துவில் சாராயக்கடைக்கான அனுமதியை வழங்காமல் அரசு நிறுத்த வேண்டும் : ஹரீஸ் எம்.பியை தொடர்ந்து மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் எம்.பியும் குரலெழுப்பினார்.



நூருல் ஹுதா உமர்-
மீபத்தைய நாட்களில் பேசுபொருளாக மாறியிருக்கும் பொத்துவில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்க கூடாது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் இன்று (06) பாராளுமன்றத்தில் குரலெழுப்பினார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி அங்கிருக்கும் பொது அமைப்புக்கள் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். அங்கு மதுபானசாலை அமைவதை தான் வன்மையாக எதிர்ப்பதாகவும், குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிருந்து 200 மீட்டருக்குட்பட்ட பிரதேசத்தில் பாடசாலைகள், பௌத்த விகாரை, கோயில், தேவாலயம், ஜும்மாபள்ளிவாசல், வைத்தியசாலை, நீதிமன்றம், பாலர் பாடசாலை என்பன அமைந்துள்ளது. அங்கு மதுபானசாலை அமைந்தால் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் மதுபானத்திற்கும் நிறைய பணத்தை ஒதுக்கி சீரழிவர்.

பொத்துவில் பிரதேசம் சுற்றுலாத் துறைக்கான இடமென்பதால் கொஞ்சம் தள்ளி ஐந்துக்கு மேற்பட்ட மதுபானசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்திடம் அந்த மதுபானசாலைக்கான அனுமதியை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இப்போது முன்னெடுத்து வருகிறது. அதனிலிருந்து அரசாங்கம் விடுபட்டு நாட்டை முக்கியமான துறைகளை முன்னேற்ற தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


இந்த மதுபானசாலை ஆரம்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை ஆரம்பம் முதலிருந்தே திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எதிர்த்து வருவதுடன் எதிர்கால சந்ததியை பழுதாக்கும் இந்த மதுபானசாலையை அனுமதிக்க முடியாது என்று தனது பக்க விளக்கமளிப்பை நேற்று பொத்துவில் பிரதேச செயலகத்திலும் சாட்சியமளித்திருந்ததுடன் இந்த மதுபானசாலையை பொத்துவிலில் அமைக்க விடாது தடுக்கும் நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முழுமையாக ஈடுபட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :