ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோஸ்தர் அபுல்ஹஸன் பொத்துவில் கமக்கார அமைப்புகளினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.அஸ்ஹர் இப்றாஹிம்-
பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொத்துவில் -5 கிராமத்தில் கிராம சேவையாளராக கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோஸ்தர் முஹம்மட் அபுல் ஹசன் அவர்களின் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிராமத்தில் இயங்கி வரும் கமக்கார அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொத்துவில் அல்-பஹ்ரியா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது கிராமத்தில் மிகச் சிறப்பாக கடமையாற்றிய கிராம சேவை உத்தியோஸ்தர் முஹம்மது அபுல் ஹசன் அவர்களின் சேவையினை பாராட்டி கெளரவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொத்துவில் - 05 கிராமத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் புதிய கிராம சேவை உத்தியோஸ்தர் எம்.ஐ. முஸ்தாக் அவர்களும் இவ் அமைப்பினால் வரவேற்கப்பட்டார்.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.எம்.அப்துல் மஜீத் பிரதமஅதிதியாகவும்,சிறப்பு விருந்தினர்களாக அனைத்துப் பள்ளிகள் சம்மேளனத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற ஆசிரியரும் முன்னாள் கமநல சேவை அமைப்பின் தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எம்.சித்தீக் , உடகோவை கமக்கார அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம்.ஏ றசீது , அமைப்பின் செயலாளர் எம்.ஐ.சபூர்தீன் , பொருளாளர் ஏ.சி. லாபிர் மற்றும் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :