கலாநிதி ஹஸன் மெளலானாவுக்கு ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சில் தலைவர் வாழ்த்து.எம்.எஸ்.எம்.ஸாகிர்-

க்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரியை ஸ்ரீ லங்கா ஷரிஆ கவுன்சிலின் ஆயுட்கால தலைவரும், பஹ்ஜதுல் இப்ராஹீமியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளருமான அஷ்-ஷெய்க் தேசமான்ய ஹஸ்புல்லாஹ் அப்துல் காதிர் பஹ்ஜி கடந்த (16) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாகச் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பஹன மீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் அப்துல் முஜீப், ஜாமிஉல் கைராத் மஸ்ஜித் பிரதம இமாம் அஷ்-ஷெய்க் ஏ.எச்.எம். மஹ்தி ரவ்லி மற்றும் நிவ்ஸ்நவ் மீடியாவின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலாநிதி ஹஸன் மௌலானா 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு சர்வமதத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :