மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மருதமுனைக்கு பாடசாலைகளுக்கு விஜயம் .


நூருல் ஹுதா உமர்-

ல்முனை கல்வி வலய மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீதின் அழைப்பிற்கிணங்க கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி. திஸாநாயக்க மருதமுனை பாடசாலைகளுக்கு நேற்று வருகைதந்தார்.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹ்துல் நஜீம் அவர்களின் ஆலோசனைக்கமைய, ஆசிய மன்றத்தின் முன்னாள் செயற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம். வலீத், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் அனுசரணையுடன் பாடசாலை நிர்வாகத்தினர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, பாடசாலையின் வேண்டுகோள் கடிதம், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களின் சிபார்சிற்கு அமைவாக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களை எம்.ஐ.எம். வலீத், நேரில் சத்தித்து பெற்றுக்கொண்ட விசேட அனுமதியின் பிரகாரம், மாகாணக்கல்வித் திணைக்களத்தினால் மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணம் நேற்று உத்தியோகபூர்வமாக அதிபர் ஏ.குனுக்கத்துல்லாஹ், பிரதி அதிபர் என்.எம்.முபீன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இதற்மைய அல்மதீனாவின் பாடசாலையின் ஆராதனை மண்டப திருத்தபணிகள் வலயகல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், வலய வேலைகள் மேற்பார்வையாளர் ஆகியோரின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிதி ஓதுக்கீட்டிற்கான உத்தரவினையும், அனுமதியினையும் வழங்கிய கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு. ஜி.திஸாநாயக்கா, இதற்கான சிபார்சினை வழங்கிய கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் அ. கனகசூரியம், மாகாண பிரதம கணக்காளர், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஆசிய மன்ற முன்னாள் செயற்திட்ட ஆலோசகர் ஆகியோருக்கு மதீனா பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் ஏ. குனுக்கத்துல்லாஹ் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும் அல் மனார் மத்திய கல்லூரிக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் இன்று கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க அவர்களினால் அதிபர் ஐ.உபைதுல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

இதற்கான முயற்சிகளை கல்லூரியின் பழையமாணவர் வலீத் அப்போதய கிழக்குமாகாண விளையாட்டுத்திணைக்கள பணிப்பாளர்.எம்.எம். நௌபீஸ் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கமைவாக இவ் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஹஸ்மி மூஸா, சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.ஏ.எம்.அஸ்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :