பல்கலை செல்லும் 37 வீரமுனை மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா.
வி.ரி.சகாதேவராஜா-

ல்கலைக்கழகம் மற்றும் கல்வியியற் கல்லூரிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வீரமுனை மாணவர்களுக்கான மாபெரும் பாராட்டு விழாவும் கௌரவிப்பு விழாவும் இன்று(19) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வீரமுனை ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நடைபெற இருக்கிறது.

2கே2, சமூகநல அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய பிரதம குரு ஸ்ரீ நிமலேஸ்வர குருக்கள் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல் எம். ஹனீபா சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா சிறப்பு அதிதிகளாக உதவி கல்விப் பணிப்பாளர்களான பி பரமதயாளன் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கே டி எஸ் .ஜெயலத் மற்றும் விசேட அதிதியாக பாடசாலை அதிபர் ஈ.தயாநிதி ஆகியோர் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்கலைக்கழகம் மற்றும் கல்வி கல்லூரிக்கு சென்ற சுமார் 37 மாணவர்கள் இந்த அமைப்பினால் இன்று கௌரவிக்கப்பட இருக்கின்றார்கள் என்று 2கே2 அமைப்பின் தலைவர் எம் கமல், செயலாளர் ஆர்.யோகலட்சுமி, பொருளாளர் என்.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :