சபாபதிப்பிள்ளை இராசகுமார் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கான திடீர் மரண விசாரணையாளராக நியமணம்.


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவு முழுவதற்குமான திடீர்மரண விசாரணையாளராக வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை இராசகுமார் நீதி சிறைச்சாலைகள் அமைச்சால் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் திடீர்மரண விசாரணையாளராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.பீற்றர் போல் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபாபதிப்பிள்ளை இராசகுமார் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு இவர் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சில கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு மட்டுமான திடீர் மரண விசாரணையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் வாழைச்சேனை இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் சமய, சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயல்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :