சம்பள அதிகரிப்பு கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று தம்பலகாமத்தில் இன்று (30)இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்து கொண்டு பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு 20ஆயிரம் ரூபா எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படவேண்டும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு இதனால் வாழ்வது கஷ்டம் எனவே சம்பள அதிகரிப்புக்கோரிய போராட்டமொன்றை கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
அதிகரி அதிகரி 20ஆயிரம் ரூபா அதிகரி போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதில் கிராம உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி,முகாமைத்துவ சேவை,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.
0 comments :
Post a Comment