தங்கம் வென்று தேசிய மட்டத்துக்கு தெரிவான கல்முனை அல் மிஸ்பா மாணவன் ஆகில் மிகா வரவேற்பு..!


எம்.என். எம். அப்ராஸ்-

கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 14 வயதின் கீழ் பிரிவு ஆண்களுக்கான 80 மீட்டர் தடைதாண்டல் ஓட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றி தங்க பதக்கம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் எம்.எம்.எம்.ஆகில் மிகா மற்றும் மாகாண விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய ஏனைய மாணவர்களையும் அம் மாணவர்களை பயிற்றுவித்து, போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் ஏ.ஜே.எம்.சஸான்,விளையாட்டுப் பயிற்று விப்பாளர்களான எம்.ஜே.எம்.முபீத்,ஏ.ஜே.எம்.சாபித் ஆகியோரை வாழ்த்தி வரவேற்கும் கெளரவிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் அவர்களின் தலைமையில்,பிரதி அதிபர் எம்.ஆர்.எம்.நௌஸாட் அவர்களின் நெறிப்படுத்தலில் நேற்று பாடசாலையில் (25)நடைபெற்றது.

பாடசாலை அமைந்துள்ள அலியார் வீதியால் மேற் குறித்த அனைவரும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பாடசாலை சமுகத்தினரால் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 இந்நிகழ்வில் பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.ஜே.எம்.முபீத் அவர்களினால் ஆகில் மிகாவுக்கான வெற்றிப் பரிசாக இலங்கை தேசிய மெய்வல்லுனர் சங்கத்தினால் அதன் 100வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட தங்க நினைவுச் சின்னம் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

மேலும் பங்குபற்றிய ஏனைய மாணவர்களும் மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்,தங்கப் பதக்கம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் எம்.எம்.எம்.ஆகில் மிகாவின் பெற்றோர் ஆகியோர் ஆசிரியர்கள்,மாணவர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :