ஏ.ஜே.எம். முஸம்மிலின் சேவையைக் கௌரவிக்குமுகமாக நிகழ்வுஅஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநாரக சபையில் முன்னாள் மேயர் ஏ.ஜே. எம். முஸம்மில் அவர்கள் 2011- 2016 ஆண்டு காலப்பகுதிகளில் 5ஆண்டுகள் மேயராக சேவையாற்றியுள்ளார். அவர். கொழும்பு மாநகர சபையின் 25 ஆவது மாநகர முதல்வராக பணியாற்றியவரும், தற்பொழுது ஊவா மாகாணசபையின் ஆளுனராகவும் உள்ள ஏ.ஜே.எம். முஸம்மிலின் சேவையைக் கௌரவிக்குமுகமாகவே அவரது நிழற்படம் ஒன்று கொழும்பு மாநகர சபையின் அலுவலகத்தின் முன் மண்டபத்தில் இன்று 07ஆம் திகதி திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ரா ஜெயவர்த்தன ஏற்பாட்டில் இந் இந் நிகழ்வுகள் நடைபெற்றன. எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பிணர் மயந்த திசாநாயக்கவும் , கொழும்பு மாநகர சபையின் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய மாநகர சபை ஆணையாளர்.

முன்னாள் மேயர் முசம்மில் அவர்களின் காலத்தில் கொழும்பு மாநகர சபையில் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் இடம் பெற்றன அத் திட்டங்களினால் இன்றும் கொழும்பு வாழ் மக்கள் பெரிதும் நன்மையடைந்து வருகின்றனர். வெள்ளவத்தை பொதுச் சந்தை, வரை தொட்டு மட்டக்குழி பொதுசந்தை. விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்கா, மருத்துவ.விளையாட்டு நிலையங்கள, பாதை அபிவிருத்திகள், பழைய தொடர்மாடி வீடுகள் அழகுபடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் திருமதி பெரோஸா முசம்மில் அவர்களினால் பல்வேறு மகளிர் , மத நல்லிணக்க நிகழ்வுகள் சமுச சேவைகள் போன்ற நன்நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள். முன்னெடுக்கப்பட்தாகவும் ஆணையாளர் அங்கு கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :