சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பிரதேசமான நெய்னாகாடு அல் அக்ஸா வித்தியாலய மாணவிகள் இருவர் இம்முறை (2023) கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை, நெய்னாகாடு அல் அக்ஸா வித்தியாலய மாணவி பாத்திமா றினா என்ற மாணவி 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 60 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ஓட்ட போட்டிகளில் இரண்டாம் இடத
யும்,
மாணவி யூ.எல்.எப். சீபா 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று கிழக்கு மாகாண மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட இரு மாணவிகளுக்கும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம் மாஹிர் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார் .
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.பி.ஹிபதுல்லா அவர்களும் கலந்து கொண்டார்.

0 comments :
Post a Comment