மர்ஹூம் ஐ.எம் சாதாத் ஞாபகார்த்த வெற்றி கிண்ணம் 2023 தொடரில் ஏறாவூர் அப்துர் றஹ்மான் விளையாட்டுக் கழகம் 66 ஓட்டங்களினால் வெற்றி



அஸ்ஹர் இப்றாஹிம்-
ர்ஹும்.ஐ.எம்.சதாத் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் தொடரில் ஏறாவூர் அப்துர் றஹ்மான் விளையாட்டுக்கழகத்திற்கும், சில்வர் பிஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையலான போட்டி அண்மையில் ஏறாவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்படுத்தாடிய ஏறாவூர் அப்துர் றஹ்மான் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 242 ஓட்டங்கள பெற்றனர் .
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஸயான் இர்ஷா 76 ஓட்டங்களையும் சிரேஷ்ட வீரர் முஹம்மட் நிம்ஸாத் 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய சில்வர் பிஸ் அணியினர் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக அணித் தலைவர் ஸயான் இர்ஷா தெரிவு செய்யப்பட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :