சிறுவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் சிறுவர்களை வலுவூட்டும் வகையிலும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் யுனிசெப் (UNICEF) அமைப்பு அனுசரணையில் கல்முனை வலய கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட ஜந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே காமிலா ஏற்பாட்டில் பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் இடம் பெற்ற பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) "பாட்மிண்டன் (Badminton)" விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் "பாட்மிண்டன் (Badminton)" விளையாட்டு உபகரணங்களை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபர் ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை அவர்கள் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன் கல்லூரியின் உடற்கல்வி பாட ஆசிரியையும் விளையாட்டு துறை பொறுப்பாளருமான எம்.ஐ. ரஃபீக்கா பீவி (தரம் - 07 பகுதி தலைவி) குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி, அல்-மனார் மத்தியகல்லூரி, நற்பிட்டி முனை லாபீர் வித்தியாலயம், கல்முனை அல்-மிஸ்பா மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், அதிபர்கள், ஆசிரியர்கள் ,பொலீஸ் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment