மிச்நகர் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட சௌபாக்கியா வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம்!



ஏறாவூர் சாதிக் அகமட்-
முர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் ஏறாவூர் நகர பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மிச்நகர் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட சௌபாக்கியா வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம்

இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு ஏறாவூர் பிரதேச செயலகத்தின் மிச்நகர் கிராம உத்தியோகத்தர் பிரில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று சௌபாக்கியா வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்ட பயனாளிகளிற்காக நிர்மானிக்கபாபடவுள்ள புதியவீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டும் வைபவம் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது

மிச்நகர் பகுதியில் நிரந்தர வீட்டினைக் கொண்டிராத சமுர்த்தி பயனாளிகள் இவ் வீடமைப்புத் திட்டத்தினால் பயனடைகின்றனர்

ஒவ்வொரு வீடும் தலா 750000 உரூபா சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மானிய உதவியுடனும் சமுர்த்தி பயனாளிகளின் நிதி பங்களிப்புடனும்

ஏறாவூர் நகர் ஸகாத் நிதியத்தினதும் அனுசரணையுடன் வீடுகள் நிர்மாணம் செய்யப்படும்
இந் நிகழ்விற்கு ஏறாவூர் நகர் உதவிப்பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ஏ.சீ.அகமட் அப்கர் அவர்களும்

சமுர்த்தி தலைமயக முகாமையாளர் திரு கி.கணேசமூர்த்தி அவர்களும் சமுர்த்தி சமுக அபிவிருத்தி உதவியாளர் திரு யு எல் எம் அஸீஸ் அவர்களும் மிச்நகர் பிரிவிற்குரிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பிரிவின் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
இத்திட்டத்தினால் நன்மையடையும் பயனாளிகளின் நிறைவுசெய்யப்படும்
வீட்டின் இறுதிப்பெறுமதி சுமார் 15 லட்சங்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :