மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் விரைவில் ஆரம்பம்பாறுக் ஷிஹான்-
2023 ஆண்டு மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கல்முனை சனிமெளண்ட் விளையாட்டுக் கழக ஸ்தாபகரும் , அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களில் ஒருவரும் கல்முனை மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான எம்.எச்.எம்.அப்துல் மனாப் தெரிவித்தார்.

கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் விரைவில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக அணுசரனையில் நடைபெறவுள்ள மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் தொடர்பில் நேற்று (30) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக அணுசரனையுடன் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படவுள்ள 2023 ஆண்டு மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ண சுற்றுப்போட்டியானது சிறப்பாக நடாத்தப்படவுள்ளது.எமது சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் உப தலைவர்களில் ஒருவரும் சிறந்த விளையாட்டு வீரரும் கிழக்கு மாகாண அணியில் தேசிய ரீதியில் இடம்பெற்ற வீரருமான மர்ஹூம் எம்.ஐ.எம் இக்பால் எம்மை விட்டு பிரிந்து 22 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூறும் முகமாக கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் சுற்றுப்போட்டி ஒன்றை இரவு மின்னொளியில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதில் மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட சங்கத்தை சேர்ந்த 3 அணிகளும் காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக்கினை சேர்ந்த 2 அணிகளும் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கினை பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஏ கழகங்களும் அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கினை சேர்ந்த 5 அணிகளுமாக மொத்தமாக 22 அணிகள் இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.இச்சுற்றுப்போட்டிகள் தினமும் மாலை 6 மணி முதல் ஆரம்பமாகி இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

எமது சனிமௌன்ட் விளையாட்டுக் கழகமானது அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்குடன் இணைந்து இச்சுற்றுப்போட்டிற்கான சகல விடயங்களையும் தற்போது மேற்கொண்டுள்ளன..இச்சுற்றுப்போட்டியின் முதல் பரிசாக ரூபா 50 ஆயிரமும் இரண்டாம் பரிசாக ரூபா 25 ஆயிரமும் மூன்றாவது பரிசாக ருபா 10 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.ஒவ்வொரு போட்டிகளிலும் அதிக கோல்களை அடிப்பவர்களுக்கு விசேட பரிசுகள் வழங்கப்படவுள்ளன.இப்போட்டியை சிறப்பாக நடாத்துவதற்கு பல அணுசரனையாளர்கள் உதவியுள்ளனர்.எனவே கல்முனையில் முதல் முதலாக நடைபெறவுள்ள மின்னொளி இச்சுற்றுப்போட்டியை சிறப்பாக நடாத்துவதற்கு சகலரும் எமக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளன முக்கியஸ்தர்கள் நடுவர்கள் கழகங்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :