மருத்துவர் ச சௌந்தரராஜன் திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 45 ஆவது தலைவராக பதவியேற்பு நிகழ்வு



திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 45 ஆவது தலைவராக. மருத்துவர் ச சௌந்தரராஜன் அவர்கள் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் 02.07.2023 - ஞாயிற்று கிழமை அன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மருத்துவர் N வர்ணகுலேந்திரன் - கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் கலந்து கொண்டார். இவர்களுடன் சிறப்பு விருந்தினராக திரு பிராஜ் கண்ட்ரி மண்டல் - துணை தலைவர், LANKA IOC PLC, Trincomalee கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் திரு நா. கிட்னதாஸ், கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.

செயலாளர் S. ஜெய்சங்கர் 2022 - 2023 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

இவ் நிகழ்ச்சியில் திரு பௌசி ராஜீவ் என்ற ஒரு நோயாளிக்கு மருத்துவ உதவியாக Rs. 30,000/= கையளிக்கப் பட்ட்து.

திரு பிராஜ் கண்ட்ரி மண்டல், LANKA IOC PLC, Trincomalee, சார்பில் Rs.360,000/= மான்களுக்கான உணவு அளிக்கும் செயல் பாட்டுக்கு வழங்கப் பட்ட்து.

இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் திரு நா. கிட்னதாஸ் புதிதாக தெரிவான தலைவர் மருத்துவர் s. சௌந்தரராஜன் அவர்களுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

பிரதம விருந்தினர் மருத்துவர் N வர்ணகுலேந்திரன் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார நிலையில் தேவை உள்ள மனிதர்களுக்கு, மற்றவர்களுடன் இணைந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படட S.ஜெகதீஸ்வரன் நன்றியுரை நிகழ்த்தினார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :