30 வ‌ருட‌மாகஅதிகார‌ம் இருந்தும் கிழ‌க்கை அபிவிருத்தி செய்ய‌ முனையாமல் செந்தில் தொண்டைமானின் வாசல் தேடிச்செல்லும் அரசியல் தலைவர்கள்சுமார் முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளாக‌ அர‌சிய‌ல் அதிகார‌த்தில் இருந்தும் கிழ‌க்கு மாகாண‌ ம‌க்க‌ளுக்கு உருப்ப‌டியான‌ சேவை செய்யாத‌ ஹ‌க்கீமும், ஹிஸ்புல்லாவும், அலி சாஹிர் மௌலானாவும், அதாவுள்ளாவும் கிழ‌க்கு ஆளுன‌ருமான‌ இளைஞ‌ருமான‌ செந்தில் தொண்ட‌மானின் காலில் போய் விழுந்துள்ள‌மை இறைவ‌ன் இவ‌ர்க‌ளுக்கு கொடுத்த‌ த‌ண்ட‌னையாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

ர‌வூப் ஹ‌க்கீம் இருப‌த்தொன்ப‌து வ‌ருட‌மாக‌ எம்பியாக‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் பெருவாரியான‌ ஓட்டுப்போட்டு அத‌ன் ப‌ல‌னாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ராக‌ ப‌ல‌ அமைச்சுக்க‌ளிலும், கிழ‌க்கு மாகாண‌ ச‌பை உறுப்பின‌ராக‌வும் இருந்த‌வ‌ர். கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் அதிக‌ ஓட்டுக்க‌ளால்த்தான் இன்ன‌மும் அதிகார‌த்தை அனுப‌விப்ப‌வ‌ர்.

அலி சாஹிர் மைலானாவும் ஹ‌க்கீம் கால‌த்தில் இருந்தே அதிகார‌த்திலும் எம்பியாக‌வும் இருந்த‌வ‌ர்.

ஹிஸ்புல்லாவும் 1989ம் ஆண்டு முத‌ல் எம்பியாக‌ இருந்த‌வ‌ர். பிர‌தி அமைச்ச‌ராக‌, அமைச்ச‌ராக‌ கிழ‌க்கு மாகாண‌ ச‌பை அமைச்ச‌ராக‌ ஆளுன‌ராக‌ இருந்த‌வ‌ர்.
மூவ‌ருமே இள‌ம் வ‌யது முத‌ல் அதிகார‌த்தில் இருந்து சுக‌ம் அனுப‌வித்து விட்டு இப்போதும் மூவ‌ரையும் விட வ‌ய‌தில் இளைய‌வ‌ரான‌ ஆளுன‌ர் செந்தில் தொண்ட‌மானிட‌ம் சென்று கிழ‌க்கு மாகாண‌ அபிவிருத்தி, ஏறாவூர் ந‌க‌ர‌ச‌பை காணி விச‌ய‌மாக‌ பேசுவ‌த‌ற்கு அவ‌ர் வீடு தேடி போயுள்ள‌ன‌ர்.

அப்ப‌டியாயின் இந்த‌ 30 வ‌ருட‌ங்க‌ளாக‌ அதிகார‌ம் இருந்தும் கிழ‌க்கை இவ‌ர்க‌ள் அபிவிருத்தி செய்ய‌ முனைய‌வில்லை என்ப‌து தெளிவாக‌ தெரிகிற‌து. இப்போது கொஞ்ச‌மும் வெட்க‌மின்றி ஆளுன‌ர் காலில் வீழ்ந்துள்ள‌ன‌ர்.

செந்திலை ஆளுனராக‌ நிய‌மித்த‌ அதே ஜ‌னாதிப‌தி ர‌ணிலின் காலிலாவ‌து விழுந்திருந்தால் சில‌ பிச்சைக‌ளை போட்டிருப்பார்.

ட‌ய‌ஸ்போராவின் காசுக்காக‌ ஜ‌னாதிப‌தி ர‌ணிலை எதிர்த்துக்கொண்டு ஒரு எம்பியாக‌ கூட‌ இருக்காத‌ செந்திலின் காலில் இவ‌ர்க‌ள் விழுந்துள்ள‌மை த‌மக்கு அதிகார‌ம் த‌ந்து ஆளாக்கிய‌ கிழ‌க்கு முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு இவ‌ர்க‌ள் செய்த‌ துரோக‌த்துக்கு இறைவ‌னின் த‌ண்ட‌னையாகவே நாம் பார்க்கிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :