கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராகிறது கிழக்கு நட்புறவு ஒன்றியம் !நூருல் ஹுதா உமர்-
ளைஞர்கள் மற்றும் பிள்ளைகள் போதைப்பொருள் பாவனையில் அதிகமாக ஈடுபடுவதற்கு பெற்றோரின் பொடுபோக்கும், மூத்தவர்களை மதியாத்தன்மையும், சுய முன்னேற்றம் தொடர்பில் அக்கறையில்ல கவனயீனமும் காரணமாகும் என கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.நசீர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பகுதியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் அனுசரணையில் 'புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம்' எனும் தொனிப்பொருளில் எதிர்ப்புப்பேரணி தொடர்பில் வெள்ளிக்கிழமை (9) இரவு அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பிள்ளைகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனயீனமும் காரணமாகும், இவ்விடயத்தில் பெற்றோர்கள் ஒத்துழைக்காவிடின் இப்போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் முன்னேற்றமானது ஏற்படப்போவதில்லை. இதை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஒழுக்காற்று பிரிவினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அந்த பணியை அவர்கள் சிறப்பாக முன்னெடுத்தலும் கூட சிலரின் ஒத்துழைப்பு இன்மையே போதைப்பொருள் பரவலுக்கு காரணமாக அமைகிறது. இது தொடர்பில் பல வேலைத்திட்டங்ககளை பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளவிருக்கின்றோம்.

அது மாத்திரமின்றி 1994 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு சமூக மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நாங்கள் கல்வி மேம்பாட்டுக்கும் சிறந்த வேலைத்திட்டமொன்றை எதிர்காலத்தில் செய்ய எண்ணியுள்ளோம். மாணவர்களின் கல்விக்காக இலவச பிரத்யோக வகுப்புக்கள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதுடன் நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை போன்ற பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயார் படுத்தவுள்ளதுடன் வியாபார நிர்வாகம் தொடர்பிலும் பயிற்சியளிக்க உள்ளோம் என்றார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம்.பைசர் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோர் கலந்து கொண்டு போதையொழிப்பு தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :