கருணாநிதி நூற்றாண்டு விழா!அஸ்ரப் ஏ சமட் -
மிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா எதிர்வரும் ஜூன் 03ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை - இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வு மலையக மக்கள் முன்னணி சிரேஷ்ட உப தலைவர் சதீஷ் குமார் சிவலிங்கம் தலைமையில், தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் எம்.சிறிதர், தி.மு.மாணவர் அணித் தலைவர் எம். நாகரத்திரன் ஆகியோர் கலந்து கொள்வர்.

சிறப்புரையை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றுவார். வாழ்த்துரைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, மலையக மக்கள் முன்னணி தலைவர் வே. இராதாகிருஷ்ணன் எம்.பி. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனம் எம்.பி, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், இந்து கலாசார முன்னாளா இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர். யோகராஜன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :