மாணவர்களின் கல்வி உரிமையை அடாத்தாக பறிக்கும் செயற்பாடுகளில் மாநகர,பிரதேசபை ஆணையாளர்கள் ஈடுபடக்கூடாது.-ஜுனைடீன் மான்குட்டி



× மாணவர்களின் கல்வி தற்போது 9 மாதம் மேலதிகமாக அரசு       எடுத்துள்ளது.
× பரீட்சைகள் காலம் மாற்றப்பட்டு குறுகியதாக்கப் பட்டுள்ளது.
× பரீட்சை மாதங்கள் மாற்றப் பட்டுள்ளது.
× பரீட்சை பெறுபேறுகள் தாமதம் ஆகின்றன,
× பல்கலைக்கழக நுழைவு தாமதம் அடைகின்றன,
× மாணவனின் வயது ஏறுகின்றது.

இவை பற்றி பேச, எழுத யாரும் இல்லை!
தனியார் கல்வி நிறுவங்களை மூடும் அக்கறையிலே மாநகர, பிரதேச சபைகளும், சில முகநூல் எழுத்தாளர்களும் முண்டி அடிக்கின்றார்கள்...
ஏனோ என கேட்க யாரும் இல்லை.
கல்முனை கல்வி வலையத்தின் கல்வி உயர்ச்சியையும், வளர்ச்சியையும் தடுப்பதற்காகவே...
தனியார் கல்வியை விமர்சிக்கின்றோம், மாணவர்களுக்கு விடுமுறை கொடுக்க சொல்கின்றோம்.
இதன் மர்மம் தான் என்ன?
ஏனைய கல்வி வலயங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு கல்வியாளர்கள் இடம் கொடுப்பதில்லை.
தனியார் வகுப்புக்களை கல்வி போட்டித் தன்மை உள்ள காலத்தில் நிறுத்தக் கோரி முகநூலில் விளம்பரம் கொடுப்பதும், மாணர்களின் "கல்வி உரிமைக்கு" எதிராக மாநகர, பிரதேசபை ஆணையாளர்கள் தனியார் கல்வி நிலையங்களை தாமதித்து வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் என ஆணையாளர்கள் கையொப்பமிட்டு சட்டங்கள் போடுவதும் ஒரு மாணவனின் கல்வி உரிமையை அடாத்தாக பறிக்கும் செயற்பாடுகள் என ஒரு பெற்றோராக பொறுப்புடன் கூறுகின்றேன்.
தனியார் கல்வி நிலையங்கள் பற்றி விமர்சிப்பதும், குறை கூறுவதும் இந்த கல்முனை கல்வி வலயத்தில் மட்டுமே நான் கான்கின்றேன்.
அம்பாரை மாவட்ட கல்வி போட்டித் தன்மையான கல்வியாக மாறி விட்டது.
மாணவர்களே விடுமுறை தேவை இல்லை, காலம் பொல்லாதது....
நேரம் பெண்ணானது என கூறுகின்றார்கள்.
எனவே மாணவர்கள் பாடசாலை கல்வியை மட்டும் நம்பாது தனியார் கல்வி நிறுவனத்தையே கல்வி தேடலுக்கு பெருதும் நம்பி உள்ளார்கள். பெற்றோர்கள் உட்பட.
பாடசாலையில் ஒழுக்கக் கல்வியை மட்டுமே இன்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதனை பாடசாலைகள் திறம்பட செய்கின்றார்கள்.
புத்தக கல்விக்கு மட்டும் பாடசாலைகள் இடம் கொடுத்தால்...
சமூகத்தில் ஒழுக்கமற்ற, அதபுஹ் இல்லாத கல்வி மட்டுமே இறுதியில் மிஞ்சும்.
விடுமுறை என்பது எமது பிரதேசத்துக்கு மிகவும் ஆபத்தானது....
அந்த விடுமுறையை தொடர் கல்விக்கு செலவு செய்வது பொருத்தமானது என்பதே எனது பார்வை.
"மாணவ கல்வி உரிமையை"
அதிகாரிகள் கேள்விக்கு உட்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப் படுவார்கள்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :