சாய்ந்தமருதில் புகைத்தல் மற்றும் மதுவுக்கு எதிராக வீதிக்கு களமிறங்கிய புத்திஜீவிகள் (படங்கள்)



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருதில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் முழு அனுசரனையில் " புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம் " மாபெரும் எதிர்ப்பு பேரணி இன்று சனிக்கிழமை (10) காலை 9 மணிக்கு சாய்ந்தமருது ஸாஹிறாக் கல்லூரி வீதி முன்றலில் இருந்து சாய்ந்தமருது பிரதான வீதி வழியாக மாளிகா சந்தியில் நிறைவடைந்தது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நசீர், நிர்வாக பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம். பைசர், நிதிப் பணிப்பாளர் முன்னாள் சாய்ந்தமது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.ஹிபத்துல் கரீம், சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், நிதி உதவியாளர் ஏ.சி.முஹம்மட் உள்ளிட்ட பிரதேச செயலக உயர் அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியின் போது கிழக்கு நட்பு ஒன்றியத்தினால் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர் வர்த்தக நிலையங்களில் ஒட்டப்படவுள்ளதுடன் புதைத்தல் எதிர்ப்பு தின கொடி விற்பனையும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பினை சாய்ந்தமருது பிரதேச வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வழங்கியதுடன் மக்களுக்கு விழிப்பூட்டும் பிரச்சாரங்களும் இடம்பெற்றது.


















































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :