ஏழுமாணவர்கள் குளவிகொட்டுக்காகி வைத்தியசாலையில் பாடசாலைக்கு பூட்டு குளவிகூடுகளுக்கு தீ வைத்து அழிப்பு.



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-
ட்டன் கல்விவலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் 02.04.2023.செவ்வாய்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

இன்று காலை இந்த மாணவர்கள் பாடசாலைக்கு சமுகம் தந்து கொண்டிருந்த போது பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டினை கழுகு மோதியமையினால் குளவி கூடு கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளதாக பாதிக்கபட்ட மாணவர்கள் தெரிவிக்கிக்னறனர் .

இதில் எல்பட தமிழ் வித்தியாலயத்தில் ஒரு ஆண் மாணவனும் 05பெண் மாணவர்கள் மற்றும் பொகவந்தலாவ ஹோலிரோஸரி தமிழ் மகாவித்தியாலயத்தில் ஒரு மாணவி உட்பட மொத்தம் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் காயங்களுக்கு உள்ளான ஏழு மாணவர்களும் தரம் 11 வகுப்பை சேர்நதவர்கலன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

இதன் காரனதாக இன்றய தினம் ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பாடசாலை ழூடப்பட்டுள்ளதாக எல்பட தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் தியாகராஜன் தெரிவித்தார். இதேவேளை சம்பவத்தை அறிந்த பிரேதேச மக்கள் மரத்தில் இருந்த குளவி கூடுகளை தீ வைத்து அழித்தமை குறிப்படதக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :