சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபர் விவகாரம்! எதிராகவும் சார்பாகவும் மாணவர்கள்,பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!



ம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் இரத்துச் செய்ய வேண்டாமென்று கூறியும் இன்று காலை 09 மணியளவில் சம்மாந்துறை வலயக் கல்விஅலுவலகத்திற்கு முன்பாக இரண்டு அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிபரது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிய மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிபருக்குச் சார்பான பல்வேறு பதாதைகளை ஏந்திய மாணவர்களையும் பெற்றோர்களையும் காணக்கூடியதாக இருந்தது.

குறித்த இரு சாரரினதும் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தன.இங்கு சம்மாந்துறை பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் வேண்டும், எங்கள் பிள்ளைகளின் விடுதலைப் பத்திரத்தை தா, போன்ற கோசங்கள் எழுப்பினார்கள்.

இதே வேளை, அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்பாடசாலை அபிவிருத்திக் குழுவுக்கு தெரியாமல் சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிட நிர்மாணத்தில் ஊழல் செய்த அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று கோசமிட்டனர்.

(அவர்கள் குறிப்பிட்ட கட்டிட நிர்மாணத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாவென கல்வித்திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் ஏ.எம் சாஹீர் அவர்களை எங்களது செய்திப் பிரிவு வினவியபோது; அவ்வாறான ஊழல் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.)

இந்நிலையில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.செய்யத் உமர் மௌலானா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களினால் கையளிக்கப்பட்ட மகஜரையும்பெற்றுக் கொண்டார்.

அத்தோடு தங்களின் கோரிக்கைகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர்களுக்கு அறிவிவித்து அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடவடிக்கைகளைஎடுக்க இருப்பதாகத் தெரிவித்தார்.












 








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :