மக்கள் சேவையை பாராட்டி றிசாத் பதியுதீனுக்கு நிந்தவூரில் கௌரவிப்பு !நூருல் ஹுதா உமர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் ஆகியோர் நிந்தவூரில் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு நிந்தவூர் மக்கள் காங்கிரஸ் செயற்குழுவின் ஏற்பாட்டில் நிந்தவூர் அழகாபுரி விடுதியில் இடம்பெற்றிருந்தது. முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காய் அயராது உழைத்துக் கொண்டிருக்கும், இச்சமூகத்திற்காக குரலெழுப்பியமையால் இன வாத சக்திகளின் சதிகளுக்குள் சிக்கி சிறைவாசம் அனுபவித்து மீண்டு வந்து சமூகத்திற்காய் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை,பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் அவர்கள் நிந்தவூர் மன்னுக்கு செய்த சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கடந்த முறை நிந்தவூர் பிரதேச சபையில் ஆட்சியமைத்ததனூடாக அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குள் முதன்மையான சபையாக நிந்தவூர் பிரதேச சபை தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் முன்மாதிரியான சபையாக பலராலும் பாரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அடைவுகளை பெற்றுக் கொள்வதற்காக சிறந்த நிர்வாகத் திரனுடனான வழிகாட்டல்களைச் செய்து முன்மாதிரியான சபையாக திகழ வைத்தமைக்காவும் கடந்த முறை வேட்பாளர்களாக களமிறங்கிய அனைவருக்கும் உறுப்பினர் பதவியினையும் வழங்கி அனைத்துக் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக செயற்பட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டைமையை கெளரவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் அவர்களுக்கு கட்சியின் நிந்தவூர் செயற்குழு, பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் நிந்தவூர் மத்திய குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :