அக்கரைப்பற்று, DCC கூட்டத்தில் அதாவுல்லா சபீஸ் நேரடி மோதல்!




எஸ்.முபாரக்-
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று இடம் பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா அவர்கள் பல விடயங்கள் தொடர்பாக கதைத்துவிட்டு கூட்டத்தை நிறைவுசெய்யும் போது திடீரென எழுந்த மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் இங்கு என்ன ஹிட்லர் ஆட்சியா நடக்குதா? என்றார். மற்றவர்களும் தனது கருத்துக்களை கூறவேண்டும் என கூறி மைக்கை வாங்கினார் எஸ் எம் சபீஸ்
சபீஸ் தொடர்ந்து கூறுகையில் ( கூட்டத்தில் பேசிய மாதிரிமே இங்கு எழுதப்பட்டுள்ளது விவரம் பின்னர் வழங்கப்படும் )
ஊரில் அதாவுல்லா பிறந்ததும் வளர்ந்ததும் வயல்காணிக்குல்தான்.
தலைநகரில் உள்ளவர்கள் கட்டும் வீடுகள் 100 வருடங்கள் தாண்டியும் இருக்கும்போது நம்மவர்கள் 25 வருடங்களுக்கு ஒருமுறை வீட்டை உடைத்து கட்டுவதன் காரணம் என்ன?
இந்த ஊரில் Bench level எடுத்து பாதை செப்பனிடுவதற்கு 9 வருடங்கள் எடுத்தது எதற்க்காக தெரியுமா ?
வெள்ளப்பாதுகாப்பு bound ஏன் கட்டப்பட்டது தெரியுமா?
ஊர் வடிச்சல் எங்கால வடியுது என்று உங்களுக்கு தெரியுமா?
வயல்கானிக்குள் கட்டப்பட்ட தனியார்கலூரியின் நீச்சல்தடாக திறப்பின் பின் இப்பிராந்தியம் முறையாக அபிவிருத்தி செய்யப்படவேண்டிய தேவை தொடர்பில் உங்களிடம் விளக்கம் அளித்தேன் நீங்களும் ஒத்துக்கொண்டு இப்போது நாக்கு பிரட்டுகிண்றீர்கள்.
DCC கூட்டத்தை கூட்டி எத்தனை வருடங்களுக்கு கத்தரிக்காய் நாட்டுவதையும் வெண்டிக்காய் நாட்டுவதையும் பற்றி பேசுவயல் இதற்கு DCC தேவையா?
DCC யால் அக்கரைபற்றுக்கு ஒரு தொழில் துறையை கொண்டுவர அல்லது அடையாளம் காண வக்கில்லாமல் போனது ஏன்?
விவசாய மாவட்டத்தில் வாழும் நாம் அது தொடர்பான கைத்தொழிலை கண்டுபிடித்திருகின்றோமா? இத்தனை வருடங்களில் ஒரு பிஸ்கற் கொம்பனியை கொண்டுவர முடியுமால் போனது ஏன்?
பாரிய சொப்பிங் கொம்ளெக்ஸ்களை கட்டி தலை நகரில் உள்ள நோலிமிட் பெசன் பக் KFC போன்ற நிறுவனங்களை இங்கே கொண்டுவருவதைபற்றி என் சிந்திக்கவில்லை?
பல்லாயிரக்கணக்கான மக்களை எமது நகரத்தை நோக்கி என் வரவழைக்க முடியவில்லை?
அரசாங்க கட்டிடங்களை ஒருங்கமைக்க குழு அமைக்கின்றீர்கள் பொதுவான 10 மாடி கட்டிடம் இங்கே இருப்பது போல் பேசுகின்றீர்கள் அவ்வாறு இங்கு உள்ளதா? இல்லையென்றால் இங்கு இருக்கும் காரியாலயங்களை இடித்து தள்ளிவிட்டு காரியாலயத்துக்கு என்ன செய்யப்போகின்றீர்கள்?
நீங்கள் போட்டுள்ள குளுக்களில் இருப்பவர்கள் 10பேர் கொண்ட மாவட்ட காரியாலயம் இங்குதேவையில்லை என கூறியவர்கள்தான் நான்தான் அவர்களுக்கு காரியாலயம் பார்துக்கொடுத்தேன் இவர்களை வைத்து குழு அமைத்தால் நன்றாக சபை விளங்கும்.
தில்லை ஆறு எது என்று உங்களுக்கு தெரியாது உப்பு ஓடைதான் இங்கு உள்ளது பாலத்தின் மேல் ஏறி பாருங்கள் திருக்கோவில் பக்கத்தில் 100அடி அகலமும் அக்கரைப்பற்று பகுதியில் 450அடி அகலமும் இருப்பதன் மர்மம் என்ன?
தண்ணீர் வழிந்தோடும் வாயிலில் இருந்து தோண்டாமல் ஊரின் நடுவில் தோண்டி அக்கரைபற்றுக்கு மொத்த வெள்ளத்தையும் கொண்டுவந்த அறிவாளி யார்?
தலைவர் அல்ல அவரது தந்தை என்றாலும் அநீதியை முகத்தில் பேசும் பழக்கம் என்னிடம் உள்ளது
பொத்துவில் டிரைவர் அவர்களின் அடுத்த காணி களப்பு எனக்கூறிய உங்கள் பொய்யை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
1950களில் போடப்பட்ட கல்வெட்டு இந்த ஊரின் அரைவாசி தண்ணீர் அதனால்தான் வடியுது அந்த கல்வெட்டு இப்போது அரை அடி மாத்திரமே உள்ளது இதனால் தண்ணீர் வேகமாக வடியுமா? இதனை செப்பனிட இவர்களுக்கு 10வருடங்களாக திராணி இல்லாமல் போனது என்?
2015 கு முதல் அக்கரைப்பற்றில் இருந்து இழுக்குச்சேனை சந்திவரை இருமரங்ககிலும் 300 மீற்றருக்கு மக்கள் குடியேறும் வகையில் மண்ணிரப்ப தீர்மானம் மேற்கொண்டது உங்கள் தலைமையில்தானே இப்போது உங்களால் எப்படி நாக்கு பிரட்டி பேசமுடிகின்றது?
என்ற விடயங்களை எஸ் எம் சபீஸ் முன்வைத்தபோது அரங்கமே அமைதியானது
இதன் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா (சபீஸ்) சொல்லுவதில் உண்மை உள்ளது ளன IE இதில் கவன செலுத்தவும் என கூறி கூட்டத்தை முடித்தார் அதாவுல்லா.
நன்றி தமிழ் லெட்டர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :