சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு “அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளின் கீழ் 112 ஆவது சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாவின் ஒருங்கிணைப்பில் கீழ் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் லத்தீப் தலைமையில் 2023.03.08 ஆம் திகதி கலை 9.00 மணிக்கும் பி.ப. 3.00 மணிக்குமாக இரண்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
கலையின் இடம்பெற்ற நிகழ்வில் எடின்பரோ (Edinboroug) நிறுவனம் மற்றும் கொழும்பு கொமோடிட்ஸ் ( Colombo Commodities) ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் ஒரு தொகுதி பெண்களுக்கு சமையல் தொடர்பான செயல்முறைகள் வழங்கப்பட்டு பங்கு பற்றுனர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் Chef எம்.எம்.றிபாஸ் மற்றும் எஸ்.எம்.றமீஸ் (ஊவா எப்.எம்.) ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் 54 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கூடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு திருகோணமலையைச் சேர்ந்த காப்போம் நிறுவனமானம் அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment