கிழக்கு மாகாண சதுரங்க போட்டியில் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு மாகாண மட்டத்தில் இரண்டாம், மூன்றாம் நிலைகள் !



நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டிக்காக இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் கடந்த பெப்ரவரி 25, 26ம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போட்டிகளில் கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) மாகாண மட்டத்தில் 15 வயதுக்குட்பட்ட போட்டியில் 02ம் நிலையும் 17வயதுக்குட்பட்ட போட்டியில் 03ம் நிலை பெற்றதுடன் 17வயதுக்குட்பட்ட போட்டியில் (Best on Board) - என்.எப்.எஸ்.ஆஷா, எம்.எஸ்.எப். ஷானியா அன்ஃபாவும், 13 வயதுக்குட்பட்ட போட்டியில் (Best on Board) எச்.எஃப். ஜாஃபிய்யா ருகான், 15வயதுக்குட்பட்ட போட்டியில் (Best on Board) ஐ.எஃப். மரீஹா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், சதுரங்கப் போட்டிக்காக பொறுப்பு ஆசிரியையாக கடமையாற்றிய கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி நதீரா, பயிற்சியாளர் ஏ.எம்.ரகீப், எஸ்.சுதன் ஆகியோருக்கு கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். அமீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :