3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்தகாலத்தில் "வேலோடும் மலை" முருகன் ஆலயம் என்ற ஸ்தாபனம் தோற்றம் பெற்றது.
இது இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டியில் இருந்து 7கிலோமீற்றர் பயணித்து சந்தனமடு ஆற்றை கடந்து வனத்துக்குள் 7 கிலோமீட்டர் பயணித்தால் அடையலாம். அங்கு சித்தர்கள் ரிஷிகள் நமக்காக விட்டு சென்ற எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.
இன்றும் மிக சக்தி வாய்ந்த தேவ நாகங்கள் இங்குள்ள சித்தர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்கின்றன. நேராக நாகங்களின் தரிசனங்களை, தெய்வீக வாடைகளை உணரலாம். இங்கிருந்து நாக லோகத்துக்கு செல்லும் பாதை உள்ளது என்ற கல்வெட்டு இங்குள்ளது.
இலங்கை சார்ந்த பல தெய்வ ரகசியங்கள், தேவ ரகசியங்கள் இன்றும் மறைந்திருக்கும் அற்புத மலைத்தொடர். காலம் வரும் போது அனைத்தும் வெளிப்படும் சித்தர்களின் குரல் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி கூறுகிறார்.
முருக பெருமானின் பேரருளால் வேலோடுமலை முருகன் ஆலயத்தின் அனைத்து முன்னேற்ற ஏற்பாட்டு அமைப்புகளும் சித்தர்களின் குரல் அமைப்பின் கீழ் அனைத்து பணிகளும் தொடர்ந்து நடக்க அதிகார பூர்வமாக கோயில் ஆதீன கர்த்தா சுப்ரமணியஸ்ரீ. தியாகராஜா சந்திரா தம்பதியினரால் அனைத்து முன்னேற்ற ஏற்பாட்டு பணிகளும் நடைபெற சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், மற்றும் துணை தலைவர் மனோகரன் அவர்களிடம் ஆஸ்தான குருஜி சிவஷங்கர் ஜி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
இனி காலம் காலமாக அனைத்து ஆலய நெறி முறைகளும் இனி போகர் பழனி மலையில் உருவாக்கிய "குமார தந்திரம்" நூலில் தந்திர கிரியா ஆகம முறைகளுக்கு அமைய அனைத்து நெறி முறைகளும் காலம் காலமாக நடைபெறும்.
வேலோடும் மலை ஆலயத்தின் அதிகார பூர்வமாக ஒழுங்கமைப்புகளின் ஆலோசகராக சிவயோகி மகேஸ்வரன் சுவாமிகளும், உலக மக்கள் தொடர்பாளராக கல்வியாளர், ஆன்மீக செம்மல்,சிரேஸ்ட ஊடகவியலாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களும் அதிகார பூர்வமாக முருக பெருமானின் திருவாணையின் கீழ் பதினெண் சித்தர்கள் முன்னிலையில் தங்கள் பணிகளை தொடங்கி உள்ளார்கள் என சிவசங்கர் ஜி கூறுகிறார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி பௌர்ணமி அன்று
நள்ளிரவு 12 மணிமுதல் மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி வரை இந்த யாகம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.
அதற்கு முன்னதாக அடியார்கள் மூலிகை குளியலில் ஈடுபட்டிருந்தார்கள். அங்கு உள்ள பதினெண் சித்தர்களுக்கு அபிஷேகம் இடம் பெற்றது.
வேலோடு மலை முருகன் ஆலயத்தின் தர்மகத்தா சுப்ரமணியம் தியாகராஜா முன்னிலையில் இந்த பாரிய யாகம் நடைபெற்றது
யாகத்தில் சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் ,உப தலைவர் மனோகரன், நமசிவாய மகேஸ்வரன் சுவாமி, ஸ்ரீ வேல்சாமி , ஸ்ரீ சகாதேவராஜா , ஸ்ரீ ராஜன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அடர்ந்த கானகத்தின் மத்தியில் அழகான மலையில் அமைந்துள்ள வேலூர் மலை முருகன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி முன்னிலையில் யாழ்ப்பாணம் இணுவில் வேத விற்பன்னர் வத்சன் ஐயா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு
0 comments :
Post a Comment