கல்முனை மாநகர சபை நிதி மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அம்பாறை விஷேட குற்றப்புலன் விசாரணை பிரிவுக்கு கல்முனையன்ஸ் போர பிரதிநிதிகள் நேற்று (03) காலை நேரில் சென்று நிலைமைகளை கேட்டறிந்து கொண்டனர்.
அம்பாறை விஷேட குற்றப்புலன் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பீ. பிரகலநாதன் அவர்களை சந்தித்து பேசியபோது இம்மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவர்களாயினும் அவர்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான முயற்சிகளில் பொலிஸார் மும்முரமாக செயற்படுவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட குறித்த இரண்டு மாநகர சபை ஊழியர்களுக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடையை கடந்த புதன்கிழமை கல்முனை நீதிமன்றில் பெற்றுள்ளதாகவும் அவர்களில் ஒருவரை நேற்று கைதுசெய்து விசாரணைகள் ஆரம்பிக்கட்டுள்ளதாகவும் கூறினார்.
மக்கள் அமைதியாக இருக்குமாரும் இம்மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவர்களாயினும் அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேற்படி மோசடி விடயம் தொடர்பாக கடந்த புதன்கிழமை மாநகர ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரதியும் மற்றும் சில ஆவணங்களும் கல்முனையன்ஸ் போரத்தினரால் விஷேட குற்றப்புலன் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பீ பிரகலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment