ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஓழுங்கு செய்யப்பட்ட சர்வதேச பெண்கள் தின நிகழ்வு!



அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஓழுங்கு செய்யப்பட்ட சர்வதேச பெண்கள் தின நிகழ்வு 12.03.2023 கொழும்பு -லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்கார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வு கிழக்கு மற்றும் மேற்கில் பெண்களின் உரிமைகளும் ,மதிப்புக்களும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி டாக்டர் தீபிஹா உடகம, சட்டத்தரணி சிவஸ்திகார அருலிங்கம், ஈரான் நாட்டில் இருந்து வருகை தந்த கலாநிதி ஸ்ஹேரேஹ் மிப்ராஜி, கொழும்பு மத்திய வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகரி நசிகா அமீர் ஆகியோர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்
எக்ஸ்பிரஸ் நியுஸ் பிரதம ஆசிரியை ஹனா இப்ராஹிம் இந் நிகழ்வினை நெறிப்படு்த்தினார். அத்துடன் வரவேற்புரையை மீடியாபோரத்தின் செயலாளர் சிஹார் அனீஸ், மீடியா போரத்தின் ஆலோசகர் என்.எம். அமீன் நன்றியுரையையும் நிகழ்த்தினார்கள். இந் நிகழ்வின்போது முஸ்லிம் மீடியா போரத்தின் டயரிகள் அதிதிகளுக்கு கையளிக்கப்பட்டன.
மீடியாபோரத்தின் செயற்குழு உறுப்பினர்கள், பெண் ஊடகவியலாளர்கள், பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி, ஈரான் நாட்டின் கலாச்சாரப் பணிப்பாளர் உட்பட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின்போது முஸ்லிம் பெண்கள் கலை ,கலாச்சாரம், மற்றும் முஸ்லிம் பெண்கள் உரிமைகள் இஸ்லாம் விரிவாகவும ்அல் குர் ஆண் அத்தியாயம் சூறா நிசாவில் என்ற வசனத்தில் முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல முழு பெண்களுக்கு இஸ்லாம ்உரிமைகளை வழங்கியுள்ளது. எனவும் டாக்டர் தீபிஹா அங்கு உரை நிகழ்த்தினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :