பிலியந்தலை நகர அபிவிருத்தித் திட்டம், பொது வர்த்தக நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் தொடர்பாக நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த கலந்துரையாடல் நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிலியந்தலையில் புதிய பேருந்து நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் அதன் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டது. எவ்வாறாயினும், சுமார் இரண்டு வருடங்களாக பஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மலசலகூட அமைப்பில் உள்ள பிரச்சினைகள், முறையான பராமரிப்பு, பராமரிப்புப் பணிகள் சரியாக நடைபெறாமை, மின் விளக்குகள் சரியாக வேலை செய்யாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லோகுகே மற்றும் கெஸ்பேவ நகர சபையின் தலைவர் லக்ஷ்மன் பெரேரா ஆகியோர் அமைச்சரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக, அப்பகுதி மக்களிடமிருந்து, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (01) இந்தக் கலந்துரையாடலைக் நடத்தினார்.
இங்கு, பிலியந்தலை புதிய பேருந்து நிலையத்தின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் கெஸ்பேவ நகர சபையிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.காமினி லொக்குகே கேட்டுக் கொண்டார். இதன்படி, அனைத்து நிர்வாக மற்றும் பராமரிப்பு மற்றும் துப்புரவு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக கெஸ்பேவ நகர சபையிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
பஸ் நிலையத்தில் பஸ்களை ஒழுங்குபடுத்துவதற்கு மாகாண சபைக்கு உரிமை உள்ளதாக தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் வரை வாகன தரிப்பிடத்தை கெஸ்பேவ நகரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதனை நகர சபை சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்ட போது கெஸ்பேவ நகர சபையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தது.
பிலியந்தலை நகர அபிவிருத்தித் திட்டம் - பொது வர்த்தக நிலையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பிலியந்தலை புதிய பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14.09.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டு 05.02.2020 அன்று நிறைவடைந்தன. இது 2 ஏக்கர், 3 ரூட் மற்றும் 21 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் கட்டுமானத்திற்காக செலவிடப்பட்ட தொகை 235 மில்லியன் ரூபா.
கஸ்பேவ நகரசபைக்கு சொந்தமான பழைய பொதுச் சந்தைக்குப் பதிலாக புதிய வசதிகளுடன் கூடிய சந்தை மற்றும் சந்தையின் நிர்மாணப் பணிகள் 20.01.2022 அன்று ஆரம்பிக்கப்பட்டன. புதிய பஸ் நிலையத்தை ஒட்டி இது கட்டப்படும். நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 1 ஏக்கர் 3 ரூட் 2 பேர்ச்சஸ் 19.45 காணியில் புதிய பொது சந்தை ஒன்று நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது 414 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடைகளைக் கொண்டுள்ளது. அதற்கான செலவு 498 மில்லியன் ரூபா.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, கஸ்பேவ நகர சபையின் தலைவர் லக்ஸ்மன் பெரேரா, கஸ்பேவ பிரதேச செயலாளர் கே.பி. பிரேமதாச மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment