சீன உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு



ஹஸ்பர்-
சீன - இலங்கை பெளத்த நட்புறவுச்சங்கம் மற்றும் சீன உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களை சேர்ந்த 225 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் (02) வழங்கி வைக்கப்பட்டன.

குச்சவெளி பிச்சமல் விகாரை வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சீனா இலங்கையின் நண்பன் என்றடிப்படையில் பல உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் ஒரு கட்டமாக இவ்வுதவி அமையப்பெறுவதாக சீன உயர்ஸ்தானிகர் கிவ் சென்ஹொங் இதன்போது தெரிவித்தார்.

சீனா இலங்கை கடினமான நிலவரங்களை சந்தித்தபோது அதிலிருந்து மீட்சிபெற ஆரம்பம் முதல் இன்றுவரை ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

வணக்கத்திற்குரிய தேரர்கள், இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகர் , கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சீன உயர்ஸ்த்தானிகராலய அதிகாரிகள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம்.பி. எஸ். ரத்னாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம, குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதன் , இலங்கை- சீன பெளத்த நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :