அவுஸ்திரேலியாவில் வாழும் ஓந்தாச்சிமடம் பழைய மாணவர்களால் ஓந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பல பெறுமதியான கற்றல் உபகரணங்கள் (1) புதன்கிழமை காலை ஆராதனையில் வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் திருமதி மதிவதனி பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
நன்கொடை அதிதியாக நன்கொடையாளர் சார்பாக அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பிரபல சமூக சேவையாளர் கோபாலபிள்ளை ஜனபாலச்சந்திரன்( பாலன்) கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் திருமதி அ.சற்குணராஜா, மற்றும் ஆசிரியர் முத்தையா ஜெயாதி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கடந்த வருட கபொத. சாதாரண பரிட்சையில் சாதனை படைத்த 40 மாணவர்களுக்கும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவருக்கும் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அவர்களை கற்பித்த ஆசிரியர்களும் பெறுமதியான பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து வயிரமுத்து அழகையா ,
முத்தையா மாறன் ,கோபாலபிள்ளை ஜனபாலசந்திரன் ,தெய்வநாயகம் சௌந்தரராசன்,கோபாலன் ரவீந்திரன் ,நடராசமணி கனகராஜ் ,செல்வராசா சுதர்சன் ,யோகலிங்கம் உமாகாந்தன் ,கிருபைராசா அமரதாஸ்,
அருணாசலம் இன்பநாதன் ஆகிய பழைய மாணவர்கள் இந்த பாரிய கல்வி ஊக்குவிப்பு உதவித் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment