மதுரங்குழி கடையாமோட்டை தேசிய பாடசாலையில் குவைத் அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் 27வது பாடசாலைகளுக்கு வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. அந்த வகையில் இக் கல்லுாரியிலும். இரண்டுமாடிக் கட்டிடங்கள் கொண்ட 8 வகுப்பறைக் கட்டிடம் குவைத் துாதுரக கொழும்பு அலுவலகத்தின் சார்ஜ் டி அபயார்ஸ் அப்துல் அசீஸ்அல் அத்வானி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக் கட்டித்தினை திறந்து வைத்தார்
இந்நிகழ்வு புதன்கிழமை 08ஆம் திகதி ,இக் கல்லுாரியின் அதிபா் எம்.எச்.எம் தௌபீக் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இத்திட்டத்தின் அனுசரனையாளரான அல்ஹிமா இஸ்லாமிக் சேவிஸ் பணிப்பாளர் அஷ்ஷேக் நுார்ல்லாஹ், முன்னாள் மாகாணசபை உறுப்பிணர்களான ஏ.எச்.எம். றியாஸ், ஆப்டீன் எஹியா குவைத் துாதரக அதிகாரி அஷ்ஷேக் எம் பிர்தௌஸ் , மற்றும் கல்லுாாியின் பழைய மாணவர் சங்கத்தின் பிரநிதிகள், அபிவிருத்திக்குழு, பிரதேச அரசியல் பிரமுகர்கள் பெற்றோர்கள், மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.
.
இக் கல்லுாாியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனா். இக்கல்லுாரியின் பௌதீக வளக்குறைப்பாட்டுக்கமைய இவ்வாறு இரண்டு மாடிகளை நிர்மாணிக்க வழிவகுத்த குவைத்அரசாங்கத்திற்கும்.குவைத் நன்கொடையாளர்கள் நுாறா அல் ஹைகைசுக்கும், இத்திட்டத்தினை இங்கு கொண்டுவந்த முன்னாள் அதிபர், திட்டப்பணிப்பாளர் அஷ்ஷேக் நுாருல்லாஹ் மற்றும் நாங்கள் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.என முன்னாள் மாகாணசபை உறுப்பிணர் ஏ.எச்.றியாஸ் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய குவைத் நாட்டின் பிரதித் துாதுவர் அப்துல் அசீஸ் அல் அத்வானி
புத்தளத்தில் ஏற்கனவே குவைத் அரசாங்கம் வைத்தியசாலை ஒன்றையும் மேசிலங்கா எனும் நிறுவனத்தினையும் அமைத்துக் கொடுத்துள்ளோம். அத்துடன் 27க்கும் மேற்பட்ட பௌதீகம் வளம் குறைந்த பாடசாலைகளில் வகுப்றைக் கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளோம். இதனால் நீண்டகாலத் கல்விக்கு உதவும் திட்டங்களாக இக்கட்டிடங்கள் இந்த நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். இப்பிரதேசத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் ஏனைய இனங்களும் நன்மை வகிக்கக் கூடிய வகையில் நாம் உதவி வருகின்றோம். எமது குவைத் துாதுவரின் வேண்டுகோளுக்கிணங்கவே குவைத் நாட்டு அரபு நன்கொடையாளர்கள் கல்வி, மருத்துவம், பல்கலைக்கழக் கல்வி என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து இலங்கையில் தொடா்ச்சியாக உதவி வருகின்றதாகவும் அப்துல் அசீஸ் அத்வானி அங்கு உரையாற்றினார்
இங்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர்கள் சார்பாக சஞ்சிகை ஒன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டது. அத்துடன் இக்கட்டிடத்தினை இங்கு நிர்மாணிக்க உதவியவர்களுக்கும் மற்றும் , அதிதிகளுக்கும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கல்லுாரி மாணவர்கள் அரபுபாட்டு,கசிதா, இசை, வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
0 comments :
Post a Comment