சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது - 03 ஆம் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை உத்தியோகபூர்வமாக கையளிக்கின்ற நிகழ்வு இன்று (23) வியாழக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஜஃபரின் ஏற்பாட்டிலும், சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுக அபிவிருத்தி பிரிவு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் கே.அசோக்குமார், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத். ஏ. மஜீத் , பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். நபார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment