இஷாக் ரஹுமான் எம்.பி யின் முயற்சியில் மனாருல் உலூம் பாடசாலையில் 4 வகுப்பறைகளை கொண்டகட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.





ஐ.எம். மிதுன் கான்-
னுராதபுரம், கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் நான்கு வகுப்பறைகளை கொண்டபுதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நேற்று (14) காலை 9 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கஇலங்கைக்கான குவைத் நாட்டு தூதுவர் மேன்மைதங்கிய கலாப் எம். புதயிர் அவர்களின் வழிகாட்டலில் அல்ஹிமா இஸ்லாமிக் சேர்விசஸ் அமைப்பின் பணிப்பாளர் அல் ஹாஜ் நூறுள்ளா நளீமி அவர்களின் முயற்சியில்குவைத் இஸ்லாமிக் கெயார் அமைப்பின் ஊடாகவே இவ்வேலைத்திட்டம் நடைபெற இருக்கின்றது. இதற்கானமுழு நிதியினையும் குவைத் நாட்டின் நதா அப்துல் அசீஸ் பின்த் தலாமா என்பவர் வழங்குகிறார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானோடு அல் ஹிமா இஸ்லாமிக் சேர்விஸ் அமைப்பின்பணிப்பாளர் நூறுல்லாஹ் நளீமி அவர்களும் அடிக்கல்லை நட்டி வைத்தார். பாடசாலை அதிபர் ஜெ.எ. அசாத்முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகள், அண்மைய பாடசாலைஅதிபர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :