ஈழத்து பழனி என அழைக்கப்படும் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா எதிர்வரும் 30 ஆம் தேதி வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது என ஆலய பரிபாலன சபையின் தர்மகர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா தெரிவித்தார்.
தொடர்ச்சியாக ஆறு நாட்கள் திருவிழா இடம்பெற்று ஏழாம் நாள் ஏப்ரல் ஐந்தாம் தேதி தீர்த்தோற்சவத்துடன் பெரு விழா நிறைவடைய இருக்கிறது.
30ஆம் தேதி வியாழக்கிழமை சித்தாண்டி பொதுமக்களின் திருவிழாவாக அன்று காலை ஐந்து முப்பது மணிக்கு சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை இடம்பெற இருக்கின்றது. அதேபோன்று நான்காம் தேதி காலை 5 மணிக்கு வந்தாறுமூலை பொதுமக்களின் திருவிழா ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம் பெறும்.
சித்தாண்டி மாவடி வேம்பு கொம்மாதுறை தேவபுரம் கோரலங்கேணி வந்தாறுமூலை மற்றும் ஆலயதிருவிழா குழுவினரால் இந்த ஏழு நாள் திருவிழாக்கள் இடம்பெற இருக்கின்றது.
பிரதம குரு சிவஸ்ரீ கு.க. அரவிந்த குருக்கள் தலைமையில் உற்சவம் தொடர்ச்சியாக இடம் பெறும் என்று ஆலய பரிபாலன சபை தர்மகர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment